2 கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு

Added : டிச 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ஆம்பூர்:ஆம்பூர் அருகே, இரண்டு கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில், திருப்பதி கெங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு 9:00 மணிக்கு அர்ச்சகர் ஜெயபால், 65, கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை வந்த போது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
2 கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு

ஆம்பூர்:ஆம்பூர் அருகே, இரண்டு கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில், திருப்பதி கெங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு 9:00 மணிக்கு அர்ச்சகர் ஜெயபால், 65, கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை வந்த போது, கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில், கோவில் வளாகத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை பெயர்த்து மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.


கோவிலில் இருந்த கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் உண்டியலை துாக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதே போல கோவில் வளாகத்திற்குள், நாகாத்தம்மனுக்கு தனி கோவில் உள்ளது. இங்குள்ள முன்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், ஒரு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. உம்மராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (5)

sridhar - Chennai,இந்தியா
03-டிச-202212:33:04 IST Report Abuse
sridhar சேகர் பாபு வருவதற்குள் அப்படி என்ன அவசரம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-டிச-202212:09:32 IST Report Abuse
Ramesh Sargam இதெல்லாம் 'கழக கண்மணிகள்' வேலையாதான் இருக்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202210:40:21 IST Report Abuse
Kasimani Baskaran அறநிலையத்துறை தொடர்ந்து உண்டியல் பணத்தை திருடியதைத்தான் கண்டு பிடித்து விட்டார்களோ என்றுதான் சந்தோசப்பட்டேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X