புதுடில்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் , இவரது மனைவி லீனாவும் ஆகியோர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
![]()
|
இந்நிலையில் பாலிவுட் நடிகையர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு, சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸ்,, நோரா பதேஹி ஆகியோர் மீது பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பிய நிலையில், நடிகை நோரா பதேஹி கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நோரா பதேஹி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தினர்.