பந்தலூர்:நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெடி மருந்து சப்ளை செய்த மொத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தமிழக கேரளா எல்லை பகுதியான நாடுகாணி பகுதியில் கடந்த 29ஆம் தேதி இரவு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். அவர்கள் வைத்திருந்த பையில், , தடை செய்யப்பட்ட வெடி மருந்து பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை அடுத்து நாடுகானி பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் ரதீஸ் ஆகியோரே போலீசார் கைது செய்து, வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் நாடு காணி, தேவாலா, பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தங்க சுரங்க பாதைகளில், பாறைகளை உடைத்து தங்க படிமங்கள் எடுக்க இந்த வெடிபொருட்களை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் வெடி மருந்து பொருட்களை மொத்தமாக சப்ளை செய்யும், நண்பர்கள் குறித்துவிசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு பகுதியில் சிலர் வெடி மருந்து பொருட்களை மொத்தமாக சப்ளை செய்வது தெரிய வந்தது. இதில் பந்தலூர் மற்றும் நாடுகாணி பகுதிகளுக்கு வெடி மருந்து பொருட்கள் சப்ளை செய்த அப்துல் கபூர் 51. என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தேவாலா டி. எஸ் .பி .செந்தில்குமார் கூறுகையில், , தேவாலா உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய தங்க சுரங்கங்களில், தங்க படிமங்களை எடுக்கும் பணி தடை செய்யப்பட்டு உள்ளது. இதையும் மீறி சிலர் தங்க படிமங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனவே இது தொடர்பாக போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் விதி மீறி யாரேனும் தங்க சுரங்க பகுதிகளில் படிமங்கள் எடுக்கும் பணியை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.