பள்ளிப்பட்டு:குக்கிராமங்கள் வழியாக, பள்ளிப்பட்டு நகருக்கு செல்லும் தார்ச் சாலை சீரழிந்து கிடப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், மேலப்பூடி கிராமத்தில் இருந்து பெருமாநல்லுார் வழியாக, பள்ளிப்பட்டு நகருக்கு தார்ச் சாலை வசதி உள்ளது.
இந்த வழியாக, பெருமாநல்லுார் மற்றும் குமாரராஜிபேட்டை கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
சொரக்காய்பேட்டை, மேலப்பூடி கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளிப்பட்டு நகருக்கு வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை, நீண்டகாலமாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக சீரழிந்து கிடக்கிறது. மேலும், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.