கும்மிடிப்பூண்டி:சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், குருவராஜகண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில், நாளை காலை 8:30 மணி முதல், பகல் 12:30 மணி வரை, இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
சத்ய சாய் நகரும் மருத்துவமனை குழுவினர் பங்கேற்கும் முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம் பார்க்கப்படும்.
மேலும், எக்ஸ் -- ரே, இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
காலை 8:00 மணி முதல், 11.30 மணி வரை, பெயர் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.