கோவை:மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன், உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், கைதிகளை நேரில் பார்த்து பேசும் நடைமுறைக்கு பதிலாக, சிறைக்குள் 'டெலி இன்டர்காம்' வாயிலாக பேசும் வசதி, கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வக்கீல்கள் இன்று மாலை மத்திய சிறை அமைந்துள்ள ரோட்டில் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.