வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிரதமர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் வரும், 5ம் தேதி டில்லி செல்கிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த, 'ஜி - 20' நாடுகளின் மாநாட்டில், அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு செப்டம்பரில், டில்லியில் ஜி - 20 நாடுகளின் மாநாடு, பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது.
![]()
|
இதில் பங்கேற்க வரும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அதை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், 5ம் தேதி காலை, 10:00 மணிக்கு, விமானத்தில் டில்லி செல்ல உள்ளார். மாலை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, இரவு சென்னை திரும்ப உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement