டிசம்பர் 3, 1935 -
திருநெல்வேலி மாவட்டம், கரந்தானேரியில், ஆண்டபெருமாள் - கோமதி தம்பதிக்கு மகனாக, 1935ல், இதே நாளில் பிறந்தவர் கணபதி.
முதுகலை தமிழ் மற்றும் வித்வான் பட்டம் பெற்று, அரசு பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி, நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, கதைகளை எழுதியுள்ளார். அகில இந்திய வானொலி, சென்னை தொலைக்காட்சி நிலையத்துக்காக, நிறைய மெல்லிசைப் பாடல்களையும் இயற்றி உள்ளார். ஏராளமான குழந்தை இலக்கிய நுால்களையும் எழுதியுள்ளார்.
தன் இலக்கியப் பணிக்காக, ஏ.வி.எம்., அறக்கட்டளையின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார். இவர் எழுதிய, 'அம்மா கையில் மந்திரக்கோல், ஒரு கதையின் கதை, கம்பர் விருந்து, நேரு மாமா' உள்ளிட்ட நுால்கள், குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்பட்டவை.
'அங்கயற்கண்ணி, ஆனைவிடு துாது' உள்ளிட்ட கவிதை நுால்களை எழுதிய இவர், 2019 மே 27ல், தன் 84வது வயதில் மறைந்தார்.
பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், குழந்தைகளை பாடல்களால் குதுாகலப்படுத்திய, நெல்லைக் கவிஞரின் பிறந்த தினம் இன்று!