வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைய தளம் மீது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 22-ம் தேதியன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு தீடீரென சர்வர் முடங்கியது.
விசாரணையில் எய்மஸ்சின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, 'சர்வர்' ஆகியவற்றை முடக்கும் விதமாக, 'ஹேக்கர்'கள் 'சைபர்' தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வரில் பழுது ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
![]()
|
இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஆய்வு செய்து வருகிறது.இது குறித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியது, எய்ம்ஸ் சர்வர் முடங்கியதற்கு ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் தான் காரணம் என்பது உறுதியாகியுள்ளது. ரான்சம்வேர் வைரஸால், எய்ம்ஸ் ஆய்வகங்கள், புறநோயாளிகள், பற்றிய கனிணி பதிவுகள் பாதிக்கப்பட்டன.