வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை :'இஸ்ரோ' நிறுவனம், சமீபத்தில் விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி., சி.54 ராக்கெட்டின் இ.ஓ.எஸ். 06 செயற்கைகோள் அனுப்பிய புகைபடத்தை பிரதமர் மோடி பகிர்ந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட் கடந்த நவம்ப 26-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக பாய்நது.
![]()
|
அப்போது இ.ஓ.எஸ்., - 6, செயற்கைக்கோள் ,விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் இ.ஓ.எஸ்., - 6, மூன்றாம் தலைமுறைக்கான புவியை கண்காணிக்கும் திறன் உடைய இந்த செயற்கை கோள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை அனுப்பியது.
இதனை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பகிர்நதுள்ளார்.விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” என பிரதமர் மோடி எனவும் தெரிவித்துள்ளார்.