ஊட்டி:கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. குழுவினர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கில் அடுத்த விசாரணை ஜன. 27க்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் வாளையார் மனோஜ் நேற்று ஆஜராகினார். வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதால் கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினர் ஆஜராகினர். வழக்கை ஜன. 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.
அரசு வக்கீல் ஷாஜகான் கூறியதாவது: இதுவரை நடந்த புலன் விசாரணை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. 720 அலைபேசி போன் தகவல் பரிமாற்றங்களில் உள்ள உண்மை தன்மை அறியும் விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை போலீசார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.