புதுடில்லி, :புதுடில்லியில் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற 'வீடியோ' வெளியானதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
புதுடில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், 'தனி நபரின் உரிமையில் தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அந்த வீடியோவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது.
![]()
|
இந்நிலையில், தேசிய பெண்கள் ஆணையம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, புதுடில்லி உயர் நீதிமன்ற பதிவாளர் இது குறித்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிபதி குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.