ஆளுங்கட்சி 'டிவி'க்காக கடன் வாங்கிய அரசு நிறுவனம்!

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
''அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் கடன் வாங்கி, பாக்கியை பைசல் பண்ணியிருக்குதுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.''கடன் வாங்கறது எல்லா துறைகள்லயும் சகஜம் தானே ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முழுசா கேளுங்க... அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், சேனல்கள் ஒளிபரப்புக்காக தனியார், 'டிவி' நிறுவனங்களுக்கு, பல நுாறு கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்குதுங்க... அந்தத்
ஆளும்கட்சி, கேபிள் டிவி, தனியார் டிவி, கடன்,


''அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் கடன் வாங்கி, பாக்கியை பைசல் பண்ணியிருக்குதுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.


''கடன் வாங்கறது எல்லா துறைகள்லயும் சகஜம் தானே ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''முழுசா கேளுங்க... அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், சேனல்கள் ஒளிபரப்புக்காக தனியார், 'டிவி' நிறுவனங்களுக்கு, பல நுாறு கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்குதுங்க... அந்தத் தொகையைக் கேட்டு, 'டிவி' நிர்வாகங்கள் நெருக்கடி குடுத்தும், அரசு கேபிள் நிறுவனம் அசைஞ்சு குடுக்கலைங்க...


latest tamil news


''ஆனா, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு 'டிவி'க்கு மட்டும், பிரபல வங்கியில 230 கோடி ரூபாய் கடன் வாங்கி, 'செட்டில்' பண்ணிடுச்சுங்க... 'அரசு கேபிள் 'டிவி'க்கு கடன் குடுங்க... அதுக்கு நாங்க பொறுப்பு'ன்னு தமிழக அரசு தரப்புல உத்தரவாதம் குடுத்திருக்காங்க... ஆளுங்கட்சி சேனலுக்காக, அதிகார வர்க்கம் எப்படி எல்லாம் வளைஞ்சு குடுக்குது பாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''அது சரி... ஆட்சி, அதிகாரத்துக்கு வர்றதே, இந்த மாதிரி காரியங்களை 'ஈசி'யா முடிச்சுக்க தான வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

rama adhavan - chennai,இந்தியா
03-டிச-202211:25:01 IST Report Abuse
rama adhavan 25 ஆண்டுகளுக்கு முன் பழய DMMK ஆட்சியில் ராகவன் கமிட்டி என்ற Retd. C&AG தலைமையில் ஆன குழு பல தமிழக அரசு நிறுவனங்களை மூட பரிந்துரை செய்தாக நினைவு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202207:45:51 IST Report Abuse
Kasimani Baskaran தனியார் செய்ய வேண்டிய தொழிலை அரசு செய்தால் நட்டம்தான் வரும் என்பது சுதந்திரமடைந்ததிலிருந்து நடக்கும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202204:14:50 IST Report Abuse
J.V. Iyer இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சட்டம், அரசு என்ன செய்கிறது? இதற்கு கடுமையான மசோதாக்கள், சட்டம் வரவேண்டும்.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
03-டிச-202212:44:36 IST Report Abuse
சாண்டில்யன்சட்டம் கொண்டுவந்தா சரியாயிடுமா? ஆளுநர் ஒப்புதல் கிடைக்கணுமே அதுக்கு ஒரு வழி யாராச்சும் சொல்லுங்கப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X