சென்னை : மின் இணைப்புஎண்ணுடன் 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் எளிமைப்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணை மட்டும் பதிவிட்டால் போதும்; நகலை பதிவேற்ற வேண்டியதில்லை.
தமிழக மின் வாரியம் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரிய இணையதளத்திற்கு சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை பதிவிடவேண்டும்.
![]()
|
அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்படும். அந்த எண்ணை இணையளத்தில் பதிவிட்ட பின் ஆதார் இணைக்கும்பக்கத்திற்கு செல்லும்.
அதில் வீட்டு உரிமையாளர் வாடகைதாரர் போன்ற விபரங்களை தேர்வு செய்து ஆதார் எண்ணை பதிவிடவேண்டும்.
இதுதவிர ஆதார் கார்டின் நகலையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய அதிக நேரம் எடுப்பது சரியாக பதிவேற்றாதது போன்ற சிரமங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து நேற்று முதல் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஆதார் கார்டின் நகலை பதிவேற்ற வேண்டியதில்லை; ஆதார் எண் பதிவு செய்தால் போதும் என்ற வசதிசெய்யப்பட்டு உள்ளது.
ஆதார் எண் பதிவு செய்ததும் அலைபேசி எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்படும். அந்த எண்ணை பதிவிட வேண்டும்.
Advertisement