4 நபர்களை திருமணம் செய்த மதுரை பெண் கைது

Added : டிச 03, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை : நான்கு நபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணையும் அவரது இரண்டாவது கணவரையும் சென்னை போலீசார் கைது செய்தனர்.சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 25. ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது உடன் பணிபுரிந்த அபிநயா, 28, என்பவரை காதலித்தார். அபிநயா 'தான் ஒரு அனாதை' என கூறியதால், நடராஜன் தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
 4 நபர்களை திருமணம் செய்த மதுரை பெண் கைது

சென்னை : நான்கு நபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணையும் அவரது இரண்டாவது கணவரையும் சென்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 25. ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது உடன் பணிபுரிந்த அபிநயா, 28, என்பவரை காதலித்தார். அபிநயா 'தான் ஒரு அனாதை' என கூறியதால், நடராஜன் தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஆக., 29ல் தாம்பரம் ரங்கநாதபுரம் பெருமாள் கோயிலில் அபிநயாவை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் அக்., 19ல், 15 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாயுடன் அபிநயா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், அபிநயாவின் 'ஆதார்' கார்டை வைத்து சோதனை செய்ததில் அந்த பெயரில் 32 சிம்கார்டுகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணைக்கு பின் சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், ஒரு மகளிர் விடுதியில் தங்கிருந்த அபிநயாவைநவ., 30ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரை திருமணம் செய்து நகை பணத்தை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: மதுரையைச் சேர்ந்த அபிநயா, 10ம் வகுப்பு படித்துள்ளார். 2011ல் மன்னார்குடியைச் சேர்ந்த விஜய் என்பவருடன் முறைப்படி அபிநயாவுக்கு திருமணம் நடந்தது. அவருடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அபிநயா 2013ல் செந்தில்குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

பின் செந்தில்குமாரை பிரிந்து 2020ல் ஆட்டோ ஓட்டுனரான பன்னீர்செல்வம் என்பவரை திருமணம் செய்தார். அவருடன், 10 நாட்கள் மட்டுமே வாழ்ந்த அபிநயா, நான்காவதாக தாம்பரத்தைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்து ஒன்றரை மாதங்கள் மட்டுமே வாழ்ந்து, நகை, பணத்துடன் தலைமறைவானார்.பலரிடம் ஏமாற்றிய நகைகளை இரண்டாவது கணவர் செந்தில்குமாருடன் சேர்ந்து மதுரையில் தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். சிலருடன் திருமணம் செய்யாமலும் அபிநயா வாழ்ந்துள்ளார்.

அபிநயா மற்றும் செந்தில்குமாரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து மூன்று சவரன் நகை, 74 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (27)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
06-டிச-202219:36:16 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy குழந்தை எங்கு வளர்கிறது? வியாபாரம் நடந்து விட்டதா ?
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
05-டிச-202214:12:00 IST Report Abuse
ram நன்றாக விசாரணை செய்தல் சிறப்பு
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
04-டிச-202200:07:58 IST Report Abuse
Matt P தமிழின தலைவரை போல இரண்டோடு நிறுத்தியிருக்கலாம். என்னுடைய தமிழர் தலைவன் முருகன் தான். ஆணுக்கு பெண்ணுக்கும் ஒரே நீதி தானே இருக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X