திருநெல்வேலி:திருநெல்வேலி சொக்கட்டான்தோப்பை சேர்ந்த அலெக்ஸ் மனைவி மகாராணி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு திருநெல்வேலி கீழரதவீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று(டிச.,03) இரவு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலையில் தாய் மகாராணி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு அவருக்கான சிகிச்சையை டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே மேற்கொண்டதால் தாயார் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவமனை முன்பாக மகாராணியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.