போராட்டத்திற்கு பணிந்தது சீன அரசு: பல நகரங்களில் தளர்வுகள் அறிவிப்பு

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பீஜிங்: கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சீனாவில் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின்
Beijing ,Tianjin, COVID-19 , public transport, போராட்டம், சீன அரசு,தளர்வுகள் ,

பீஜிங்: கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சீனாவில் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உரும்குயி நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் ஷாங்காய் நகருக்கும் பரவியது. இதை தொடர்ந்து தலைநகர் பீஜிங்கிலும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.


latest tamil news


போராட்டம் நடப்பதை அதிபர் ஜின்பிங்கும் ஒப்பு கொண்டார். 3 ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜின்பிங் கூறியதாக தகவல் வெளியானது. அமைதியான வழியில் நடக்கும் மக்களின் உணர்வுகளுக்கு சீன அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தி இருந்தது.


இந்நிலையில், மக்களின் போராட்டத்திற்கு அளுங்கட்சி பணிந்துள்ளது. பெய்ஜிங், தினஜின், செங்கு மற்றும் ஷென்ஜென் உள்ளிட்ட ஏராளமான நகரங்களில் கோவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இங்கு பொது போக்குவரத்தில் பயணிக்க கோவிட் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை திரும்ப பெறப்பட்டது.


செங்டு மற்றும் குவாங்சு நகரங்களில் வசிப்பவர்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது, கோவிட் சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியம் இனியில்லை.


அதேபோன்று பீஜிங்கிலும், பஸ் மற்றும் சுரங்கப்பாதையில் செல்லும் வாகனங்களில் கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் சான்று அவசியம் என்ற உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை தொடர்ந்து உள்ளது.


பீஜிங்கில், வணிக வளாகங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. அதேநேரத்தில் அங்கு அமர்ந்து சேவை பெறும் வசதிகள் அனுமதிக்கப்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (3)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
04-டிச-202211:27:22 IST Report Abuse
Rafi அடைத்து வைக்கப்பட்டு தீ விபத்தில் இறந்த அனைவரும் சிறுபான்மையினர் ஆக இருந்தாலும், மக்கள் அனைவரும் இணைந்து போராடியது, மக்கள் அனைவரும் மனித நேயத்தையே ஏற்பவர்கள் என்பது எதார்த்தம். சில கொடூரர்களை தவிர்த்து. அடக்குமுறை வெற்றி பெறுவதுபோல் இருந்தாலும், சர்வாதிகாரிகளை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணித்ததே வரலாறு.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202204:27:36 IST Report Abuse
J.V. Iyer செய்துவிட்டு போராட்டக்காரர்களை ஒருவழி செய்துவிடுவார்கள். பாவம். யாரையும் நம்பலாம் ஆனால் இவர்களை..
Rate this:
Cancel
03-டிச-202219:19:46 IST Report Abuse
ஆரூர் ரங் அரை வேக்காடு தடுப்பூசியை பாதிபேர் கூட போட்டுக் கொள்ளவில்லை. பழையபடி வவ்வால் டிபன்😛. ஊரடங்கு போட்டாலும் கஷ்டம். போடாவிட்டால் அழிவு. இதுதான் கர்மா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X