ஆன்லைன் ஓட்டல் முன்பதிவு நிறுவனமான ஓயோ, 90ஸ் மற்றும் 2கே இளைஞர்களிடையே மிகவும் பரீட்சியம். தற்போது பொருளாதார மந்தநிலையால் நிறுவனத்திற்கு புதிய முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிறுவன அமைப்புகளில் சீர்திருத்தங்களை தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக 3,700 ஊழியர்களில் 600 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தொழில்நுட்ப மற்றும் காப்பரேட் பிரிவுகளில் பணியாற்றியவர்கள்.
சாப்ட்பேங்க் முதலீடு செய்துள்ள ஓயோ நிறுவனம் தள்ளுபடி விலையில் சுற்றுலா தளங்களில் ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்யும் வசதியை வழங்குகிறது. 2020ல் கோவிட் பிரச்னையால் தங்கும் விடுதிகள் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியதால் இத்துறையின் வருவாய் முற்றிலுமாக சரிந்தது. அதனால் ஓயோவின் தொழிலும் பாதிக்கப்பட்டது. கோவிட்டிற்கு முன்பே ஓயோ ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்து வந்தது. 2020ல் இதன் நஷ்டம் ரூ.3,382 கோடி. 2021 - 22ல் நஷ்டம் 45% குறைந்து ரூ.1,892 கோடியாக உள்ளது.
இந்நிலையில் வரும் 2023ல் பங்குச்சந்தை மூலம் நிதி திரட்ட ஓயோ திட்டமிட்டுள்ளது. அதற்குள் வருமானத்தை அதிகரித்து, நஷ்டத்தை குறைத்து காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அதன் நிறுவன கட்டமைப்பில் பரந்த அளவிலான மாற்றங்களை செயல்படுத்தி வருவதாக கூறுகிறது. தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவு, கார்ப்பரேட் தலைமையகங்கள், ஓயோ விடுமுறைக்கால விடுதிகள் போன்ற பிரிவினரை குறைத்து, விற்பனை மற்றும் பார்ட்னர் மேனேஜ்மென்ட், தொழில் மேம்பாட்டுப் பிரிவுகளில் ஆட்களை சேர்க்கத் தொடங்கியுள்ளது.
![]()
|