வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி:நெல்லை வழியாக சென்ற நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக கோவை சென்றது. திருப்பரங்குன்றம் -திருமங்கலம் இடையே இரட்டை இரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் சனிக்கிழமையன்று நெல்லை வழியாக சென்ற நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக கோவைக்கு சென்றது
ஏற்கனவே நெல்லை சந்திப்பில் 8.45 மணிக்கு வர வேண்டிய ரயில் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு ரயில் வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் இந்நிலையில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் மேலும் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.