'வந்தே பாரத்' ரயில் பாதையில் ரூ.264 கோடி செலவில் வேலி

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மும்பை :“மும்பை - காந்தி நகர் இடையே இயங்கும் 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில் பாதையில் 264 கோடி ரூபாய் செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்,” என, மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறினார்.மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி
 'வந்தே பாரத் ,ரயில் பாதை ரூ.264 கோடி , வேலி

மும்பை :“மும்பை - காந்தி நகர் இடையே இயங்கும் 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில் பாதையில் 264 கோடி ரூபாய் செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்,” என, மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறினார்.


மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த ரயில் பாதையை ஒட்டி ஆங்காங்கே மாடுகள் மேய்வதால், அடிக்கடி ரயிலில் மோதி விடுகின்றன. ரயில் சேவை துவக்கப்பட்ட இரு மாதங்களில், நான்கு முறை மாடுகள் மீது மோதி ரயிலின் முகப்பு சேதம் அடைந்தது.


latest tamil news

இந்நிலையில், மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறியதாவது:

வந்தே பாரத் ரயில் பாதையில் மாடுகள் மேய்வதை தடுக்க தண்டவாளத்தின் இருபக்கமும் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மும்பை - காந்தி நகர் இடையே உள்ள 620 கி.மீ., துாரத்துக்கும், 264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்க 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.இதற்கிடையே, ரயில்வே ஊழியர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ரயில் பாதைக்குள் வராமல் பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த 2019ல் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் துவக்கப்பட்டது. முதல் சேவை புதுடில்லி - வாரணாசி இடையே துவங்கியது.
இதையடுத்து, புதுடில்லி - -ஜம்மு காஷ்மீர், மும்பை - காந்தி நகர், புதுடில்லி - ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மற்றும் சென்னை - கர்நாடக மாநிலத்தின் மைசூரூ என ஐந்து வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் துவக்குவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (11)

04-டிச-202212:54:38 IST Report Abuse
அப்புசாமி பழைய ஸ்டீம் இஞ்சின்லேருந்து, YDM டீசல் இஞ்சின்லேயும் தற்கால WAP எலக்ட்ரிக் இஞ்சின் வரை முன்னாடி Cow Catcher நு ஒரு சாதனம் பொருத்தியிருப்பாங்க. கால்நடைகள் மோதினா அந்த கௌ கேட்ச்சர் லாவகமாக கால்நடையை தூக்கி எறிஞ்சிடும். அது இந்த வந்தே பாரத் இஞ்சினில் இல்லை. அப்புடியே ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்திலிருந்து டெக்னாலஜியை இறக்குமதி பண்ணிட்டு வந்தே பாரத் ரயில்னு ஜல்லியடிச்சுக் கிட்டிருக்காங்க. அவனவிங்க ஊருக்கு ஏத்த மாதிரி டிசைன் பண்ணுவாங்க. நம்ம ஆளுங்க நம்ன ஊருக்கு ஏத்த மாதிரி டிசைன் பண்ணனும். இதே பாதையில் செல்லும் மற்ற சூப்பர் ஃபாஸ்ட் வண்டிகளில் இந்த மாதிரி விபத்து ஏற்படுவதில்லையே.. மாத்தி யோசிச்சுப் பாருங்க.
Rate this:
Cancel
04-டிச-202207:54:13 IST Report Abuse
மோகனசுந்தரம் ஒவ்வொரு திட்டத்தையும் உடனடியாக எப்படி செயல்படுத்த முடியும். கடந்த 70 வருடங்கள் இல்லாமல் இப்பொழுதாவது நடக்கிறது என்று நாம் சந்தோஷப்பட வேண்டும்.
Rate this:
Cancel
04-டிச-202206:51:46 IST Report Abuse
அப்புசாமி நாளைக்கி விமானத்தில் அடிக்கடி பறவைகள் மோதுனா ஒவ்வொரு விமானத்துக்கும் வேலி. போட்டு அனுப்புவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X