வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆசனுார் அருகே யானைக்கு கரும்பு போட்ட லாரி டிரைவருக்கு 75ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனுார் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பள்ளம் வனசோதனை சாவடி அருகில் ஆசனுார் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சாலையோரத்தில் லாரியை நிறுத்தி கொண்டு டிரைவர் யானைக்கு கரும்புகளை எடுத்து வீசிக் கொண்டிருந்தார்.
வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு தாலுகா கரியபுரத்தை சேர்ந்த சித்தராஜ்,எனதெரிய வந்தது.வனவிலங்குகளுக்கு சாலையோரத்தில் லாரியை நிறுத்தி கரும்புகளை வீசிய குற்றத்திற்காக டிரைவருக்கு 75ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பின்பு அவரை எச்சரித்து அனுப்பினர்.