வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: எனக்கெதிராக கொடுத்த புகார் மனு நகலை அனுப்பி வைக்குமாறு சி.பி.ஐ.,க்கு கவிதா கடிதம் எழுதியுள்ளார்.
புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் டிச.06-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியுள்ளது.
![]()
|
இதில் நடந்த ஊழல் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்தில் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் அமித் அரோராவுடன், கவிதா பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., கவிதாவிற்கு நேற்று சம்மன் அனுப்பி டிச.06-ல் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சி.பி.ஐ.க்கு கடிதம் கவிதா எழுதியுள்ளார் அதில், மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பணி பரிமாற்றத்தில் எனக்கெதிராக கொடுத்த புகார் மனுவின் நகலை அனுப்பி வைத்தால் டிச.06 ல் ஆஜராக தயார் என கூறியுள்ளார்.