தஞ்சாவூர்,:தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர்.
கடந்த நவ., 26ல், தஞ்சாவூர் அருகே, வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில், பெண்ணிடம் தங்கச் செயினை பறித்த திருவையாறைச் சேர்ந்த ரமேஷ், 57, என்பவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 1ம் தேதி இரவு, மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய அவரை, மருத்துவக்கல்லுாரி போலீசார் தேடினர்.
இந்நிலையில், நேற்று காலை, பள்ளியக்ரகாரம் பகுதியில் நின்ற ரமேஷை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.