அவிநாசி:அவிநாசி அருகே அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கலைத்திருவிழா நடைபெற்றது.
இதில், அவிநாசி வட்டாரத்தில் இருந்து 38 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அமுதா தலைமை வகித்து, துவக்கி வைத்தார். கவிதை, ஆடல், பாடல் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் திறம்பட மேற்கொண்டனர்.
இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, சுமதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். கலைத்திருவிழாவை, அம்மாபாளையம் பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், தெக்கலுார் - காந்தி நகர் பள்ளி தலைமையாசிரியர் ரங்கசாமி மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.