நீதிபதிகள் நியமன முறை: துணை ஜனாதிபதி கேள்வி

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது போன்ற சம்பவம் உலகில் எங்கும் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை,'' என, நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டம் குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய,

புதுடில்லி-''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது போன்ற சம்பவம் உலகில் எங்கும் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை,'' என, நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டம் குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.



latest tamil news

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய, 'கொலீஜியம்' தேர்வு செய்கிறது.


இதை மாற்றும் வகையில், தேசிய நீதித்துறை நியமனக் கமிஷன் முறையை உருவாக்கும் வகையில் பார்லிமென்டில் சட்டம் இயற்றப்பட்டது.


ஆனால், இது செல்லாது என அறிவித்து, ௨௦௧௫ல் உச்ச நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.


நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பது தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இது தொடர்பாக, கடந்த சில மாதங்களில், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:


நம் அரசியல் சாசனம், 'இந்தியர்களாகிய நாங்கள்...' என்ற வாசகத்துடனே துவங்குகிறது. பார்லிமென்ட் என்பது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பாகும்.


மக்களின் விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்றும் வகையிலேயே, பார்லிமென்டில் பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதன்படி, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது.


இதற்கு, பார்லிமென்ட் வரலாற்றில் இல்லாத வகையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அனைவரும் ஒருமித்த ஆதரவு தெரிவித்திருந்தனர்.


latest tamil news

அதாவது, இந்தச் சட்டம், நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. ஆனால், இந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.


இதன்பிறகு, பார்லிமென்டில் இது தொடர்பாக யாரும் எதுவும் பேசவில்லை. இது மிகத் தீவிரமான பிரச்னை. பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது போன்ற சம்பவம் உலகில் எங்கும் நடந்ததாக தெரியவில்லை.


இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

r.sundaram - tirunelveli,இந்தியா
04-டிச-202219:34:17 IST Report Abuse
r.sundaram தைரியமானவர்தான், பூனைக்கு மணி கட்டி விட்டார். இதற்க்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
04-டிச-202211:53:48 IST Report Abuse
Dharmavaan துணை ஜனாதிபதி துணிவை பாராட்ட வேண்டும். பார்லியமென்ட் முழு ஆதரவுடன் இயற்றப்பட்ட சட்டத்தை நிராகரிக்க நீதிக்கு அதிகாரம் உள்ளதா. இதை அரசு நிராகரித்திருக்க வேண்டும். மக்கள் அரசுக்குதானாதிகாரம் கொடுத்திருக்கிறார் ஒழிய நீதிக்கு அல்ல,நீதி பாராளுமன்றத்துக்கு கட்டப்பட்டதே.மோடி துணிய வேண்டும்.மீறும் நீதிகளை இம்பீச்மென்ட் செய்ய வேண்டும்
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
04-டிச-202211:49:48 IST Report Abuse
Dharmavaan tharpothu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X