''அங்க போறது, நம்ம பட்டாபி புள்ளையாண்டான் ரகுவரன் தானே... என்னமா வளர்ந்துட்டான் பாருங்கோ...'' என்ற குப்பண்ணா, ''தற்காலிக பணிக்கு, 5 லட்சம் ரூபாய் கேக்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பத்திரப்பதிவு பணிகள் எல்லாத்தையும் கம்ப்யூட்டர் சிஸ்டத்துக்கு மாத்திட்டால்லியோ... இதனால, சார் - பதிவாளர் ஆபீஸ்கள்ல, கம்ப்யூட்டர் பயன்பாடு
அதிகரிச்சிடுத்து ஓய்...
''இதுக்கான சாப்ட்வேர் தயாரிச்சு குடுத்த, டி.சி.எஸ்., நிறுவனம் சார்புல, ஒவ்வொரு ஆபீசுக்கும் ஒண்ணு அல்லது ரெண்டு பேரை கம்ப்யூட்டர் உதவியாளர்களா நியமிக்கணும்... தற்காலிக அடிப்படையிலான இந்த பணிக்கு மாசம், 5,000 ரூபாய் தான் சம்பளம்
தருவா ஓய்...
![]()
|
''அந்தந்த சார் - பதிவாளர், மாவட்ட பதிவாளர் பரிந்துரைக்கும் ஆட்களையே, டி.சி.எஸ்., நிறுவனம் நியமிக்கறது... தஞ்சாவூர் மண்டலத்துல, இந்த பணிக்கு சில வாலிபர்களிடம், சார் - பதிவாளர்கள், 5 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்ணிட்டா ஓய்...
''சார் - பதிவாளர்கள் சிபாரிசுல நியமிக்கப்படற இவா, அவருக்கு வசூல் ஏஜன்ட்கள் போலவே செயல்படுவா... வசூல் தொகைக்கு ஏற்ப கமிஷன் கிடைக்குமோன்னோ... அதனால, 5 லட்சத்தை அள்ளி குடுக்க பலரும் போட்டி போடறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement