கோவை விமான நிலையத்தை தனியார் மயமாக்க வலியுறுத்தல்

Updated : டிச 04, 2022 | Added : டிச 04, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கோவை: 'கோவை விமான நிலையத்தை தனியார் மயமாக்க வேண்டும்' என, கோவை தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.கோவை தொழில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:கோவை விமான நிலையத்தில், பிரத்யேக சர்வதேச புறப்பாடு முனையம், ஆபரணக்கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான மதிப்பீட்டாளர், ஓடுபாதை விரிவாக்கப்பணி, துபாய்க்கு 'ஏர் இந்தியா' விமானம் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: 'கோவை விமான நிலையத்தை தனியார் மயமாக்க வேண்டும்' என, கோவை தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை தொழில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:
கோவை விமான நிலையத்தில், பிரத்யேக சர்வதேச புறப்பாடு முனையம், ஆபரணக்கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான மதிப்பீட்டாளர், ஓடுபாதை விரிவாக்கப்பணி, துபாய்க்கு 'ஏர் இந்தியா' விமானம் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, விமானப் போக்குவரத்து துறை செயலரிடம், கடந்த 29ல் மனு அளித்தோம்.



latest tamil news



இதையடுத்து, வரும் 6ம் தேதி, கோவை விமான நிலையம் தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டத்தை, டில்லியில் ஏற்பாடு செய்துள்ளார்.
அதில், கோவை தொழில்வர்த்தக சபை சார்பில், தலைவர் ஸ்ரீராமுலு பங்கேற்கவுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கோவையை விட பின்தங்கியிருந்த பெங்களூரூ, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் தற்போது வெகுவாக முன்னேறி விட்டன.

சர்வதேச விமானங்களை இயக்க, விமான நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. சில நிறுவனங்கள், இங்கு 'லவுஞ்ச்' உட்பட வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி மறுக்கின்றன. கோவை விமான நிலையத்தை தனியார் வசம் அளித்தால் மட்டுமே, இப்பணிகள் அனைத்தும் மிக விரைவாக நடைபெறும். இதை, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, கையகப்படுத்திய வரை, தமிழக அரசு உடனே ஒப்படைக்க வேண்டும் என, முதல்வரின் செயலர் உமாநாத்தை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (17)

g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-202214:03:20 IST Report Abuse
g.s,rajan அரசிடம் இருந்தா முன்னேற விட மாட்டாங்க இந்த தனியார் முதலாளிகள் ...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-டிச-202212:31:40 IST Report Abuse
பாமரன் ஏர் இந்தியா தான் வேனும்... எமிரேட்ஸ் வந்தா வாணாமாமா...🙄 ஆனாலும் பெங்களூர் ஹைதராபாத் கொச்சி ஏர்போர்டுகளை விட முன்னனியில் கோவை இருந்ததா சொன்ன காமெடி சூப்பர்...😀😀
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
04-டிச-202211:21:20 IST Report Abuse
mindum vasantham Bjp yai thaniyar mayamaakkalaam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X