புத்தக கண்காட்சி: கலெக்டர் ஆலோசனை
புத்தக கண்காட்சி: கலெக்டர் ஆலோசனை

புத்தக கண்காட்சி: கலெக்டர் ஆலோசனை

Added : டிச 04, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில், மாவட்ட நுாலகத் துறை சார்பில் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர்கள் மணி, சுந்தரராஜன் முன்னிலை
 புத்தக கண்காட்சி: கலெக்டர் ஆலோசனை



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில், மாவட்ட நுாலகத் துறை சார்பில் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர்கள் மணி, சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட நுாலகத் துறை சார்பில், நீலமங்கலம் கிராமம் அருகே வரும் 9 முதல் 18ம் தேதி வரை 10 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் மோகன் பேசுகையில், 'கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்த புத்தக வாசிப்பே முக்கியமானதாகும். தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டு சேர்ப்பதற்காக இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் பொறுப்புடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மீனாஅருள், சி.இ.ஓ., சரஸ்வதி, ஆர்.டி.ஓ., பவித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X