கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பி.டி.ஓ., நிலையில் பணிபுரியும் 17 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., ரங்கராஜன் ரிஷிவந்தியத்திற்கும், நடராஜன் திருநாவலுாருக்கும், சங்கராபுரம் ரவிச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், ராஜேந்திரன் உளுந்துார்பேட்டைக்கும், ரிஷிவந்தியம் ஆனந்தன் கள்ளக்குறிச்சி உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்திற்கும், செந்தில்முருகன் தியாகதுருகத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதே போன்று, சின்னசேலம் துரைசாமி கலெக்டர் அலுவலகத்திற்கும், திருநாவலுார் செல்வகணேஷ் சங்கராபுரத்திற்கும், கண்ணன் உளுந்துார்பேட்டைக்கும் மாற்றப்பட்டனர்.
உளுந்துார்பேட்டை ரவிசங்கர் கள்ளக்குறிச்சி பைபர் நெட் பிரிவிற்கும், சீனிவாசன் தியாகதுருகத்திற்கும், தியாகதுருகம் பன்னீர்செல்வம் கள்ளக்குறிச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கும், இந்திராணி சின்னசேலத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவு மேலாளராக பணிபுரிந்த செல்வபோதகர், திருநாவலுாருக்கும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருந்த ஆறுமுகம் கள்ளக்குறிச்சிக்கும் மாற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி பைபர் நெட்டில் பணிபுரிந்த செல்லதுரை சங்கராபுரத்திற்கும், கள்ளக்குறிச்சி ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்த துரைமுருகன் ரிஷிவந்தியத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ளார்.