கள்ளக்குறிச்சி-பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வாழ்க்கையில் மாணவர்களின் வெற்றிக்கான திறன் மற்றும் மேம்பாட்டுத் திறன் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் சிராஜூதீன், துணை முதல்வர் சக்திவேல் மற்றும் கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் ஆய்வுத் துறை மற்றும் பொது நிர்வாகத் துறை சக்திவேல், வாழ்க்கையில் வெற்றிக்கான திறன் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், மேம்பாட்டு திறன் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கும் கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆங்கிலத் துறை பேராசிரியை கலாமணி, மணிமேகலை ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
வேதியியல் துறைத் தலைவர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.