சங்கராபுரம்-சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது.
விழாவிற்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
சங்கராபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நடுநிலைப் பள்ளி, 9 உயர்நிலைப் பள்ளி, 13 மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்கள் கலைத் திருவிழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆரோக்யசாமி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மலர்கொடி, சரசு, குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.