''மணல் லாரிகளை அனுமதிக்கிற விவகாரத்துல, ஆளுங்கட்சி புள்ளிகள் நல்லா கல்லா கட்டுறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஆந்திராவுல இருந்து தமிழகத்துக்கு வர்ற மணல் லாரிகள், திருவள்ளூர் வழியா தான் நம்ம எல்லைக்குள்ள நுழையணும்... அப்படி வரும்போது, சாதாரண லாரியில யூனிட் அளவு மணலுக்கு ஒரு ரேட்டும், 12 சக்கர லாரியில வர்ற யூனிட் மணலுக்கு ஒரு ரேட்டும் ஆளுங்கட்சியினர் வசூலிக்கிறாங்க பா...
![]()
|
''திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆளுங்கட்சி புள்ளிக்கு, பங்கு கரெக்டா போய் சேர்ந்துடுது... கட்சிப் பதவியை வாங்க, மாவட்ட புள்ளி கோடிக் கணக்குல கொட்டிக் குடுத்ததால, சட்ட விதிகளை மீறி தன் ஆதரவாளர்களை அதிக அளவுல மணல்
லாரிகளை இயக்க விடுறாரு பா...
''பொதுப்பணித் துறை ஒப்பந்த பணிகள்ல, துறையின் பெரும் புள்ளிக்கு எவ்வளவு, 'கட்டிங்' போகுதோ அதே தொகை தனக்கும் வரணும்னு மாவட்ட புள்ளி கறார் காட்டுறாரு... இதனால, ஆளுங்கட்சி நிர்வாகிகள் மத்தியிலயே புகைச்சல் கிளம்பி இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.