கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்த 6 பேரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் நபர்களை மீட்குமாறு எஸ்.பி., பகலவன் நேற்று உத்தரவிட்டார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி, மொட்டையன் மனைவி செல்வி, ராஜேந்திரன் மனைவி மணிமேகலை, மணிப்பிள்ளை மகன் கண்ணன், சடையன் மகன் சாமிதுரை ஆகிய 5 பேரை போலீசார் மீட்டு கெடிலம் அருகே உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், சின்னசேலம் பஸ் நிலையம் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த கருப்பண்ணன் மகன் தேவேந்திரன் என்பவரையும் மீட்டு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.