திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க துவக்க விழாவையொட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டியின் ரோட்டரி சங்க துவக்க விழா நாளை நடக்கிறது. அதனையடுத்து, நேற்று சங்கம் சார்பில் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் கோதம்சந்த் கோட்டமருதுாரில் இயங்கி வரும் தாய் மனசு விழி இழந்தோர் அறக்கட்டளையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு 300 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை வழங்கினார்.
ரோட்டரி சங்க துணைச் செயலாளர் சுரேஷ் ஆதித்யா, உறுப்பினர் திருவிக்ரமன் உட்பட பலர் பங்கேற்றனர்.