கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,285 பேர் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன.
இங்கு காலியாக இருந்த 44 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்தது. 44 பணியிடத்திற்கு 5,350 பேர் விண்ணப்பித்தனர்.
இதில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள 3,285 பேருக்கு இன்று காலை எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.