கடலுார்-சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில், கிள்ளைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில், கிள்ளைபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் வரை கூண்டுகளுடன் கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ரத்தின சபேசன் தலைமை தாங்கினார்.
இதில் சங்க முன்னாள் தலைவர்கள் நடனசபாபதி, நடராஜன், அழகப்பன், முன்னாள் செயலர் ஏ.பி.வி.ஆர்.ேஹாண்டா உரிமையாளர் அருண் மற்றும் கிள்ளை ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் வேத ரத்தினம், ஒன்றியத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் கனகவேல் நன்றி கூறினார்.