விருத்தாசலம்-விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுதர்சனா வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ், சுகாதார ஆய்வாளர் முரளி, வட்டார நம்பிக்கை மைய ஆலோசகர் தங்கமணி, ஆய்வக நுட்புணர் சிவக்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் நிர்மல் நன்றி கூறினார்.