நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் ரயில்வே கேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால், 30 நிமிடம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக கீழ்அருங்குணம், நத்தம், பாலுார் உட்பட பல கிராம மக்கள் சென்று வருகின்றனர். நேற்று மதியம் 11:50 மணிக்கு பயணிகள் ரயில் வந்ததால் கேட்டை மூடினர். இரு புறமும் ஆம்புலன்ஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ரயில் கடந்து சென்றும் கேட் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து வாகனங்களும் காத்திருந்தன. மதியம் 12:20 மணியளவில் கேட் திறக்கப்பட்டது. இதனால் 30 நிமிடங்களுக்கு பிறகே வாகனங்கள் கேட்டை கடந்து சென்றன. இது போன்று அடிக்கடி நடப்பதால், இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறினர்.