சிதம்பரம்-சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
துவக்க நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சிவகுரு தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் ரத்தின திருநாவுக்கரசு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கணினி அறிவியல், அறிவியல், கணிதம், வரலாறு, இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண் அறிவியல், நுாலக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. சிறந்த படைப்பை அமைத்த மாணவி ஜனனிக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் சங்கரன், ஆசிரியர்கள் சூரியமூர்த்தி, லலிதா, அன்பரசன், தர்மராஜ், சுரேஷ்குமார், ரஞ்சித்குமார், பச்சைக்கனி, கலா, வித்யாலட்சுமி, வள்ளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
ஆசிரியை திருமகள் நன்றி கூறினார்.