மாற்றுச் சந்தைகளில் காலூன்றிய வங்கதேசம்: ஐந்தே மாதத்தில், ரூ.1.47 லட்சம் கோடிக்கு வர்த்தகம்

Updated : டிச 04, 2022 | Added : டிச 04, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
திருப்பூர்: மாற்று சந்தைகளில் கால்பதித்த வங்கதேசம், கடந்த ஐந்து மாதங்களில், 1.47 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்துள்ளது.ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகளிலும், மக்களின் ஆடம்பர செலவுகள் குறைந்து விட்டன. இந்த இக்கட்டான நிலையிலும், பங்களாதேஷின் ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஐந்து

திருப்பூர்: மாற்று சந்தைகளில் கால்பதித்த வங்கதேசம், கடந்த ஐந்து மாதங்களில், 1.47 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்துள்ளது.



latest tamil news



ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகளிலும், மக்களின் ஆடம்பர செலவுகள் குறைந்து விட்டன. இந்த இக்கட்டான நிலையிலும், பங்களாதேஷின் ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஐந்து மாதங்களில், 1.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, அதேகாலகட்டத்தில், 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் வரிசையில், இந்திய வர்த்தகர்களும், வங்கதேச வாடிக்கையாளராக மாறி வருகின்றனர்.

கடந்த நவ., மாதத்தில் மட்டும், 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை, 15 ஆயிரத்து, 920 கோடி ரூபாய்க்கு 'ஓவன்' ஆயத்த ஆடைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, 2021ம் ஆண்டில், ஜூலை முதல் நவ., வரையிலான ஐந்து மாதங்களில் இருந்ததை காட்டிலும், இந்த ஐந்து மாதங்களில், 15.61 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் வளர்ச்சி பெற்றுள்ளதால், வங்கதேச ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.


latest tamil news




புதிய சந்தை



இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
வங்கதேச நாட்டின் ஏற்றுமதி வருவாயில், ஆயத்த ஆடையின் பங்களிப்பு மட்டும், 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறுகிய கால இலக்காக, 4 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி, 2030ல், எட்டு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயித்து, சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து நீங்கலாக, புதிய வர்த்தக சந்தைகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.

ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற புதிய சந்தைகளில் கால்பதித்துள்ளனர். நம் நாட்டிலும், புதிய சந்தைகளை உருவாக்குவது, தற்போதுள்ள சந்தைகளை வலுப்படுத்துவது, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி, செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

அதுபோல, 'மித்ரா' பார்க்கில் உருவாகும் ஆயத்த ஆடை கட்டமைப்புகள், உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் வாயிலாக, போட்டித்திறன் மற்றும் மூலப்பொருள் உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால், இந்தியாவும் உலக சந்தைகளில் தன் பங்களிப்பை வலுவானதாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (22)

g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-202221:02:18 IST Report Abuse
g.s,rajan நாடெங்கும் பஞ்சு விளைச்சல் குறைந்து வருவதாலும் அதற்கு தட்டுப்பாடு நீடிப்பதால் விசைத் தறி தொழில் நசிந்து வருகிறது ,இதனால் அந்தத் தொழிலில் இருப்பவர்கள் அதை எடைக்குப் போட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன.வாங்க தேசத்தை அடுத்து சீனர்களும் இந்தியாவுக்கு போட்டியாக மாறுவார்கள் ,அப்புறம் இந்தியாவில் ஜவுளித் தொழில் முற்றிலும் அழிந்து விடும் .இந்தியாவுக்கு மற்ற நாடுகளிடம் இருந்து ஜவுளிகள் இறக்குமதியாகும் என்பது மட்டும் நிதர்சனம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
04-டிச-202219:37:51 IST Report Abuse
mohan வங்கதேசத்தின் பொருள்களை இந்தியாவில் விற்க , வரியில்லா ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கேள்வி பட்டு இருக்கின்றேன்..இது உண்மையா என்று தெரிய வில்லை..இது உண்மை என்றால், இந்தியாவின், ஜவுளி வியாபாரத்திற்கு மிக பெரிய பாதிப்பு..நூல் இங்கே இருந்து பங்களாதேஷ் போகும், அங்கே இருந்து ஆடைகள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கும்..இங்கே உள்ள சிறு ஆடை உற்பத்தி நிறுவங்கள் மூட வேண்டியதுதான்...அங்கே சம்பளங்கள் குறிஐவினால், நூல் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு , தயங்க மாட்டார்கள்...
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
04-டிச-202219:11:11 IST Report Abuse
mohan நாட்டில் தணிக்கை செய்ய படாத இலவசங்களினால் , சம்பளங்கள் உயர்ந்து விட்டன...பங்களாதேஷில்,, இந்தியா பணம்தில்பில் மூவாயிரம் ரூபாய்க்கு ஆட்கள் கிடைக்கின்றநர்.. இங்கே குறைந்தது பதினைந்தாயிரம் கொடுக்க வேண்டியதுள்ளது..இந்த சம்பளங்களுக்கேற்றவாறு, நாம் உற்பத்தி செய்ய படும் பொருள்களுக்கு வெளி நாடுகளில் விலை கிடைப்பதில்லை...பின்னர் ஆர்டர்கள், பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடியா, செல்லாமல் எப்படி இருக்கும்... நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், மற்ற இலவசங்கள்...இவை நாட்டின் தொழில் துறையை சீரழித்து விட்டன...இயற்கையிலேயே , மனிதனுக்கு உட்கார்ந்த இடத்தில், சாப்பாடு கிடைத்து விட்டால், இன்னிக்கும், மனிதன், ஆடையில்லாமல், குகைகளில் தான் வாழ்ந்து கொண்டு இருப்பான்...தேடல் இருக்க போய் தான், இவ்வளவு கண்டு பிடிப்புகள்..இதை உணர்ந்து இலவசங்களை, முறைப்படுத்தினால் ஒழிய, ஒரு குறிப்பிட்ட லாபங்களுக்காக இலவசங்களை அறிமுக படித்திக்கொண்டே போனால், இந்தியாவில் தொழில் துறை இருக்காது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X