மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

Updated : டிச 04, 2022 | Added : டிச 04, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என சென்னை நடந்த திருமணம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழக கோயில்களில் 216 ஜோடிகளுக்கு இன்று(டிச.,04) இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததுடன், 30 சீர்வரிசைப்

சென்னை: மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என சென்னை நடந்த திருமணம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.




latest tamil news


ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழக கோயில்களில் 216 ஜோடிகளுக்கு இன்று(டிச.,04) இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததுடன், 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.



latest tamil news


திருமண விழாவிற்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைவருக்குமான அரசாக, திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழையில் சிரிப்பில், கடவுளை கான்பவர்கள் நாம்.


மக்கள் தொண்டே, சிறப்பு என்ற முறையில் நாம் பணிகளை செய்துவருகிறோம். அதன் அடையாளம் தான் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 30 இணையர்களுக்கு மணவிழாவை நாம் நடத்திமுடித்துள்ளோம்.


latest tamil news

சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டத்தையும், நடத்திக்கொண்டிருக்கின்றோம். அதனால் தான் அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.


அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக்கொண்டிருக்கின்றனர். மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். மன்னராட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் கோயில் என்பது மக்களுக்கு தான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (32)

g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-202222:04:22 IST Report Abuse
g.s,rajan இந்து மதம் வேண்டாம்,பிடிக்கவில்லை .ஆனால் இந்து மதத்தினரின் ஒட்டு மட்டும் வேண்டும் ,இந்த மத அரசியல் எப்படி இருக்கு ??? ஜி.எஸ்.ராஜன், சென்னை .
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
04-டிச-202220:09:28 IST Report Abuse
Sutha மதத்தை வைத்து அரசியல் செய்கிறவன்தான் திராவிடன்.ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழக கோயில்களில் 216 ஜோடிகளுக்கு இன்று(டிச.,04) இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.ஒரு ஜோடிக்கு கூட நெற்றியில் குங்குமமோ,திரு நீரோ இல்லை என்பதுதான் வெட்கக கேடான செயல்..
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-202219:59:23 IST Report Abuse
g.s,rajan ஏன்( இந்து) மதத்தை வைத்து நீங்கள் அரசியல் செய்யவில்லையா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X