8ம் தேதிக்காக காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்! அரசியல் போக்கை மாற்றுமா குஜராத் தேர்தல் முடிவுகள்?

Updated : டிச 04, 2022 | Added : டிச 04, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை:குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள், இந்தியஅரசியல் போக்கை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள டிசம்பர் 8-ம் தேதிக்காக, எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.கடந்த 2014 லோக்சபா தேர்தலில், தனிப்பெரும்பான்மையுடன் வென்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது;மோடி பிரதமரானார். அதன்பின், எட்டரை ஆண்டுகளாக இந்திய அரசியல், பா.ஜ.,வை மையப்படுத்தியே நடந்து
gujarat, narendramodi, amitshah, primeminister, home minister, election,எதிர்க்கட்சிகள், அரசியல் போக்கு, குஜராத், தேர்தல் முடிவுகள்,

சென்னை:குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள், இந்தியஅரசியல் போக்கை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள டிசம்பர் 8-ம் தேதிக்காக, எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.


கடந்த 2014 லோக்சபா தேர்தலில், தனிப்பெரும்பான்மையுடன் வென்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது;மோடி பிரதமரானார். அதன்பின், எட்டரை ஆண்டுகளாக இந்திய அரசியல், பா.ஜ.,வை மையப்படுத்தியே நடந்து வருகிறது.

கடந்த எட்டரை ஆண்டுகளில், ஒரு சில மாநிலங்களை தவிர, பெரும்பாலான மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வென்றது. 2019 லோக்சபா தேர்தலில், 300 இடங்களை தாண்டி பா.ஜ., வென்றது.மும்முனை போட்டி


பா.ஜ.,வை வீழ்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.


இந்நிலையில் குஜராத்,ஹிமாச்சல் பிரதேச சட்ட சபை தேர்தல் முடிவுகள்,டிசம்பர் 8-ம் தேதி வெளியாக உள்ளன.

குஜராத்தில், 1995 முதல் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக, குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமராகவும், குஜராத் அமைச்சராக இருந்த அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சராகவும் உள்ளனர்.


கடந்த 2001ல் மோடி, குஜராத் முதல்வரான பின், அங்கு பா.ஜ.,வை வீழ்த்த யாராலும் முடியவில்லை. மோடி பிரதமரான பின், குஜராத்தில் நடந்த 2017 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வே வென்று, ஆட்சியை தக்க வைத்து வருகிறது. ஆனால், இந்த தேர்தலில்பா.ஜ., காங்கிரஸ்மட்டுமல்லாது, ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளது. இதனால், மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


குஜராத்தில் கால் நுாற்றாண்டாக, வீழ்த்த முடியாத பா.ஜ.,வை வீழ்த்தி விட்டால், அடுத்த 15 மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றியை தடுத்து விடலாம் என, எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. வரும், 8ம் தேதி குஜராத் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.latest tamil news

மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலத்திலேயே பா.ஜ.,வை வீழ்த்தி விட்டால், தேர்தல் அரசியலில்வீழ்த்த முடியாதவர் மோடி என்ற பிம்பத்தை உடைத்து விடலாம் என, காங்கிரஸ், ஆம்ஆத்மி மட்டுமல்லாது, குஜராத் தேர்தல் களத்தில் இல்லாத தி.மு.க., சமாஜ்வாடி, திரிணமுல் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.தமிழகத்தில் எதிரொலிக்கும்


குஜராத்தில் பா.ஜ., தோற்றால், அது பா.ஜ., வினருக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும். அதன்பின் பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்ந்து விடுவர் என, எதிர்க்கட்சி தலைவர்கள் நினைக்கின்றனர்.நேற்று முன்தினம், சென்னையில் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், மூத்த தலைவர்களிடம் தனியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், 'குஜராத் தேர்தல் எப்படி இருக்கும்?' என ஆர்வமுடன் விசாரித்திருக்கிறார்.


அப்போது, 'குஜராத் முடிவுகள், தமிழக அரசியல் எதிர்காலத்தை கூட தீர்மானிப்பதாக அமைந்து விடலாம். குஜராத்தில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றால், அது நாடெங்கும் அக்கட்சியினரை, பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். அது தமிழகத்திலும் எதிரொலிக்கும்.latest tamil news

'ஆம்ஆத்மி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், ஓட்டு சதவீதமும் பெற்றால், தேசிய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக,ஆம் ஆத்மி கட்சியை பார்க்கத் துவங்கி விடுவர்' என்றும், மூத்த தலைவர்களிடம், முதல்வர் ஸ்டாலின் கூறியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (22)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202203:31:19 IST Report Abuse
J.V. Iyer மோடிஜி அரசுதான் மீண்டும். தமிழகத்திலும் மக்கள் விரும்புவது இரட்டைக்குழல் ஆட்சி. திராவிடியா கட்சிக்கு நன்றி. இப்படி ஒரு மோசமான ஆட்சியை கொடுக்காவிட்டால் மக்கள் மனம் பாஜகவிடம் திரும்பாது.. பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்ய வந்தால், இன்னும் அறுவது ஆண்டுகள் அவர்கள் ஆட்சிதான். ஜெயஹித்ந்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-டிச-202222:08:44 IST Report Abuse
g.s,rajan மோடிஜிதான் ஏற்கனவே வெற்றிக்கான சூத்திரத்தை தயார் செய்து வைத்து விட்டாரே ,அப்புறம் . ஜி.எஸ்.ராஜன், சென்னை .
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
04-டிச-202217:50:28 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாவம் ஸ்டாலின். தெருவில் உளறுவதை எல்லாம் கேட்டு ஆத்ம திருப்தி அடைகிறார். இனி தில்லுமுல்லு மாடல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியுடன் கூட்டு சேரலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X