நாள் முழுவதும் வேலை பார்த்து அலுத்து, வார இறுதியில் குழந்தைகளுடன் ஓய்வெடுக்கச் சரியான இடம் தேடி ஏங்குபவர்கள் தங்களது செக் லிஸ்டில் பரம்பிக்குளத்தை டிக் செய்து வையுங்கள். ஆண்டுதோறும் சென்றாலும் இந்த இடம் புது அனுபவம் தந்து கொண்டே இருக்கும். அமைதியான சோலை, வனத்தின் நடுவே தூக்கம், திகிலூட்டும் டிரெக்கிங் பயணத்துடன் ஓய்வு நேரத்தில் நல்ல நினைவுகளை அசைபோட ஏற்ற இடம் இது.
பரம்பிக்குளம் என்றாலே அடர்ந்த வனம், குயில்கள், மயில்கள் சத்தம், உடலை வருடும் காற்று, குளிர்ச்சியான சூழல் என இயற்கை எழில் கொஞ்சும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தை நாம் கதையாகவோ, வீடியோவாகவோ பார்த்தால் உணர முடியது. அந்த இயற்கை அழகை ரசிக்க நாம் அங்கு நேரடியாகச் செல்ல வேண்டும். கவலைகளை மறந்து குழந்தையின் ஆர்வத்துடன் இயற்கை எழிலோடு, மிரட்டலான சோலைகள் கொஞ்சும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்துக்குச் செல்லலாம் வாங்க.
பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்
![]()
|
பொள்ளாச்சியிலிருந்து சேத்துமடை சோதனை சாவடி வழியாக 10 கி.மீ தொலைவில் உள்ள டாப்சில்ப் வழியாகச் செல்ல வேண்டும். காலையில் 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒரு மணி நேர யானை சவாரி
![]() Advertisement
|
யானை சவாரி உள்ளது. இங்கு நபர் ஒருவருக்கு ரூ.150 கட்டணம் அடிப்படையில் வனப்பகுதியை யானை மீது அமர்ந்து ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்கலாம். இதுவே புதுவித திரில்லிங் அனுபவமாக இருக்கும்.
இதை முடித்து விட்டு ஒரு கிலோமீட்டர் சென்றால் மலைமேல் புலி நம்மை வரவேற்கும். பயந்து விடாதீர்கள் அது போன்று அமைப்பில் நுழைவு வாயில் தான் வரவேற்கும். இங்குள்ள சோதனை சாவடியில் நுழைவு கட்டணமாகப் பெரியவர்களுக்கு ரூ.25, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.10, வீடியோ கேமராவுக்கு ரூ300, கேமராவுக்கு ரூ.40, கனரக வாகனங்களுக்கு ரூ.300, கார், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தைச் செலுத்தி விட்டு வெளியில் வந்தால் அருகில் சிறிய பாறையில் சரணாலயத்தில் உள்ள விலங்குகளைத் தத்ரூபமாகச் செதுக்கி வைத்துள்ளனர். இது பார்ப்பதற்கே அந்த விலங்குகள் நம்மை நேரில் வரவேற்பது போன்று பிரமிப்பாக இருக்கும்.
அவற்றை ரசித்து விட்டு டிக்கெட் கவுன்டருக்கு மேலே சென்றால், பயண களைப்பைப் போக்குவதற்குச் சிற்றுண்டி உள்ளது. இங்குச் சுவையான டீ, காபி, ஸ்நாக்ஸ், கைவினை பொருட்கள், டி-ஷர்ட்கள், மலைத்தேன் உள்ளிட்டவை வாங்கிக் கொள்ளலாம்.
அடர் வனம்
![]()
|
இந்த சரணாலயம் 614 கிலோ மீட்டர் சதுர பரப்பளவு கொண்டது. இதை சுற்றிப்பார்க்க மாலை நேரத்து ட்ரக்கிங்க் ஏற்றத்தாக இருக்கும். அப்போது தான் வனவிலங்குகள் அனைத்தையும் பார்க்கலாம். சுமார் 54 கி.மீட்டர் தூரம் இந்த பயணம் இருக்கும். இந்த பயணத்தின் போது அடர் வனப்பகுதியில் உள்ள புலி, யானை, மான், முதலை, நீள்வாள் குரங்குகள், மயில்கள், காட்டெருமை, பாம்புகளைப் பார்க்கலாம். குழந்தைகளை கூட்டிச் சென்றால் அவர்களுக்கு இது மறக்க முடியாத பயணமாக இருக்கும்.
![]()
|
இங்கு ஐ-லேண்ட், மர வீடு, காட்டேஜ் என பல வகையான தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடுகளை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விவரங்கள் www.parambikulam.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
![]()
|
இங்கு ஒருமுறை சென்று வந்தால் அடுத்த முறை எப்போது செல்லலாம் என ஏங்கித் தவிக்கும் வகையில் நம்மை அந்த நினைவுகள் கட்டிப்போடும். இப்படிப்பட்ட இந்த இயற்கை சோலையை ரசிக்க www.parambikulam.org என்ற இணையதளத்தில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Advertisement