வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அனைத்து மாநில தலைநகரங்களிலும் பிரியங்கா தலைமையில் பெண்கள் பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரியில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில் துவங்கிய பாரத் ஜோடோ பாதயாத்திரை தற்போது ம.பி.,யில் நடந்து வருகிறது. இப்பேரணியானது இன்று மாலை ராஜஸ்தானில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தாண்டு ஜன.,26 முதல் மார்ச் 26 வரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தலைமையில் பெண்கள் பேரணி நடத்தப்படும் என அக்கட்சி எம்.பி., கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் இந்த பேரணி நடத்தப்படும். ராகுலின் யாத்திரை நிறைவடையும் போது, அதன் தொடர்ச்சியாக இந்த பேரணி நடத்தப்படும் என வேணுகோபால் கூறினார்.