ஒரே மேடையில் ஒரே நபரை மணந்த இரட்டை சகோதரிகள்: போலீஸ் விசாரணை

Updated : டிச 04, 2022 | Added : டிச 04, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் ஐடி.,யில் பணியாற்றும் இரட்டை சகோதரிகளை, ஒரே மேடையில் வைத்து டிராவல்ஸ் உரிமையாளர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி பாட்கோன்கர் மற்றும் பிங்கி பாட்கோன்கர். இவர்கள் ஐ.டி., துறையில் பணியாற்றுகின்றனர். கடந்த 2ம் தேதி மல்ஷிரஸ்
Twin sisters , Maharashtra, marry,man ,wedding

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் ஐடி.,யில் பணியாற்றும் இரட்டை சகோதரிகளை, ஒரே மேடையில் வைத்து டிராவல்ஸ் உரிமையாளர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி பாட்கோன்கர் மற்றும் பிங்கி பாட்கோன்கர். இவர்கள் ஐ.டி., துறையில் பணியாற்றுகின்றனர். கடந்த 2ம் தேதி மல்ஷிரஸ் தாலுகாவை சேர்ந்த அதுல் ஆவதாடே என்பவரை சகோதரிகள் இருவரும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதுல் ஆவதாடே மும்பையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.


ஒரு முறை சகோதரிகளின் பெற்றோருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அப்போது, அதுல் நடத்தும் கார் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிகிறது.


latest tamil news

இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நெட்டிசன்கள் இந்த திருமணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். ஹிந்து திருமண சட்டத்தின்படி இந்த திருமணம் செல்லுமா என கேள்வி எழுப்பினர். இந்த புகைப்படம் போலீசாரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அவர்களும் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (27)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-டிச-202221:30:27 IST Report Abuse
Vijay D Ratnam கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா
Rate this:
Cancel
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-202215:13:47 IST Report Abuse
john பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
06-டிச-202217:42:09 IST Report Abuse
sankar மஹாராஷ்ட்ராவிலும் திராவிட மாடல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X