காந்திநகர்: குஜராத்தில் நாளை (5 ம் தேதி) 2.51 கோடி வாக்காளர்கள் 833 பேர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க தாயாராக உள்ளனர்.
![]()
|
குஜராத் மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 63 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவானனது.
இந்நிலையில் நாளை (5ம் தேதி)93தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 833 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். மேலும் இவர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் 2.51 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க தயாராக உள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும், குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளும் வரும் 8 ம் தேதி எண்ணப்பட உள்ளன.
![]()
|
தாயை சந்தித்த பிரதமர்
பரபரப்புடன் காணப்பட்ட இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று (3 ம் தேதி) மாலை 5 மணியுடன் முடிந்த நிலையில் இன்று (4-ம் தேதி) தலைநகர் காந்திநகரில் வசித்து வரும் தனது தாயாரான ஹீராபென்னை சந்தித்தார் பிரதமர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement