சென்னை: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் விரைவில் வரும் என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
இது குறித்து சமஸ்கிருத பாரதி நடத்தும் கீதை ஜெயந்தி விழாவில் கவர்னர் ரவி பேசியவதாவது: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் விரைவில் வரும். பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்.

நிகழ்ச்சியில், மதுரை ஆதீனம் பேசியதாவது: எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன். இது போன்ற கவர்னரை பார்த்தது இல்லை; தமிழகத்திற்கு ஆன்மீகம் தெரிந்த கவர்னர் கிடைத்துள்ளார். இப்போதும் பாண்டவர்களும், கவுரவர்களும் இருக்கிறார்கள் என மதுரை ஆதீனம் கூறினார்.
பட்டு சட்டை, வேட்டி அணிந்து வந்த கவர்னர்:
சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு விழாவில், கவர்னர் ரவி பாரம்பரிய உடை அணிந்தது அனைவரையும் ஈர்த்தது.