மராத்தான் போட்டி: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

Added : டிச 04, 2022 | |
Advertisement
கோவில்பாளையம்:கோவை மராத்தான் போட்டியில், 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், கோவை மராத்தான் போட்டி நேற்று கோவில்பாளையத்தில் நடந்தது. கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். மராத்தான் போட்டியில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என, 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 மராத்தான் போட்டி: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவில்பாளையம்:கோவை மராத்தான் போட்டியில், 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், கோவை மராத்தான் போட்டி நேற்று கோவில்பாளையத்தில் நடந்தது. கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். மராத்தான் போட்டியில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என, 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கோவில்பாளையத்தில் துவங்கி, குரும்பபாளையம், சரவணம்பட்டி வழியாக கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில், 18 கி.மீ., துார ஓட்டம் முடிவடைந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கி கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சேர்மன் டாக்டர் நல்லா பழனிச்சாமி பேசுகையில்,"புற்றுநோயை வெற்றி கொள்ள அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்பதே இந்த ஓட்டத்தின் மைய கருத்து. புற்றுநோய் என்றாலே பயம் கொள்ள தேவையில்லை. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும். இந்தியாவிலேயே இங்கு மட்டுமே ஹைபர் ஆர்க் என்னும் நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X