ஆமதாபாத்:''தேர்தலில் முஸ்லிம் பெண்களை போட்டியிட செய்வது, இஸ்லாம் மதத்துக்கு எதிரானது,'' என, ஆமதாபாத் ஷாஹி இமாம் ஷப்பீர் அஹமத் சித்திகி தெரிவித்து உள்ளார்.
![]()
|
குஜராத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், ஆமதாபாதில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் ஷப்பீர் அஹமத் சித்திகி நேற்று தெரிவித்ததாவது:
இஸ்லாமில் பெண்களுக்கென குறிப்பிட்ட நிலை உள்ளது. அதனால் பெண்கள் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
மசூதிக்குள் அவர்கள் வந்து தொழுகை நடத்துவதை நியாயப்படுத்தினால், பின் அவர்கள் வருகையை நிறுத்த முடியாது. தொழுகை என்பது இஸ்லாமில் முக்கியமானது.
அதேபோல் முஸ்லிம் பெண்களை தேர்தலில் போட்டியிட நிறுத்துவது, இஸ்லாமுக்கு எதிரானது மட்டுமல்ல, இது எங்களது மதத்தை பலவீனப்படுத்தி விடும். பெண்கள் தேர்தலில் போட்டியிட்டால் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து மத வேறுபாடின்றி அனைவரிடமும் பேச வேண்டியிருக்கும் என்பதால், பெண்களுக்கு சீட்டு வழங்கும் யோசனையை கடுமையாக எதிர்க்கிறேன் .
![]()
|
முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல் சீட்டு வழங்குபவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் மற்றும் மதத்தை பலவீனப்படுத்துகின்றனர்.அரசியல் கட்சிகளில் ஆண் வேட்பாளர்களுக்கு பஞ்சமா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.