ஸ்ரீவில்லிபுத்துார் : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் நிலையில், கேரள எல்லையின் நுழைவாயிலில் அமைந்துள்ள பழைய ஆரியங்காவு ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை.
இதனால் சபரிமலை பக்தர்கள் ஆரியங்காவு கோவிலில் தரிசனம் செய்ய முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர். எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம், இந்த 'சீசன்' நேரத்திலாவது அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், பழைய ஆரியங்காவு ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்